search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம் வாபஸ்"

    • இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க பரிசீலனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அவர்கள் அறிவித்தனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு

    கன்னியாகுமரி, ஆக.27-

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    இருப்பினும் அவர்களது எதிர்ப்பை மீறி பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. அதனை மூட வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 25-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களுடன், நாகர்கோ வில் ஆர்.டி.ஓ. சேது ராம லிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பல மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. இதைத்தொ டர்ந்து கடந்த 18 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா்.
    • 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

    மலைவாழ்மக்கள் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். இதில் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    போராட்டத்தின்போது மலைவாழ் மக்கள் தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பெ.சண்முகம் தலைமையிலும், மாநில மலைவாழ் மக்கள் சங்கத் துணைத் தலைவா் செல்வம், எஸ்.ஆா்.மதுசூதனன் ஆகியோா் முன்னிலையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதையடுத்து போராட்டக்காரா்களுடன் வனத்துறையினா் 4 கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வனத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் போராட்டக் குழுவோடு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதில், முதல்கட்டமாக மலைவாழ் மக்களின் 200 ஆண்டு கோரிக்கையான திருமூா்த்தி மலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைத்து கொள்ள அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா்.

    தளி பேரூராட்சி மூலமாக இதற்காக விரைவில் நிதி ஒதுக்கி டெண்டா் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதர கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாக்டர்களின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்தார்.
    • கலெக்டர் மேற்பார்வையில் 6 மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தணிக்கை செய்யப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்ப ட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொட்டா ரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாவை, சிகிச்சைக்கு சென்ற போதை நபர் குத்தி கொன்றார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்யும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

    இதையடுத்து நேற்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போராட்டக்குழுவினருடன் பேச்சு நடத்தினார். அப்போது டாக்டர்களின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்தார்.

    டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும், மேலும் இது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்க மந்திரி சபை கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் சுகாதார துறையினர் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் கூடுதல் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

    மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் மேற்பார்வையில் 6 மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தணிக்கை செய்யப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்ப ட்டது.

    இதனை ஏற்றுக்கொண்ட டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

    • 2 கோரிக்ைககளை நிறைவேற்ற அமைச்சர் உறுதியளித்ததாக வந்த தகவலையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
    • அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தருமபுரி,

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவ–லகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர் போராட்டம்

    பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறையை ஒரு மாதகாலமாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வழங்கும் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளது போல் முழுத்தொகையையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட கலெக்டர் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விடிய. விடிய இன்று காலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி போலீசார் நேற்று இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வாபஸ்

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் இன்று மதியம் அமைச்சர் கீதாஜீவனிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறியாத தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராடி கொண்டிருந்தவர்கள் சிறிது நேரம் கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்ெதாடர்ந்து அவர்களுக்கு தங்களது 2 கோரிக்ைககளை நிறைவேற்ற அமைச்சர் உறுதியளித்ததாக வந்த தகவலையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பின்னர் அவர்கள் 1 மணியளவில் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    போராட்டம் வாபஸ் என்று அறிவிப்பு வெளி வந்த பிறகும் சிறிதுநேரம் தருமபுரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வந்தன.
    • லாரிகளை இயக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை கிரஷர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கொரட்டகிரி கிராமத்தில் 6 ஜல்லி கிரஷர் குவாரிகள் உள்ளன. கிரஷரில் கொரட்டகிரி கிராமம் வழியாக இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வந்தன.

    குவாரிகளால் வீடுகள் விரிசல் ஏற்படுவதாகவும், சாலைகள், விலைநிலங்கள் பாதிப்படைவதாக எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8 மாதங்களாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் லாரிகள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டன.

    இந்நிலையில் குவாரி உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம் கொரட்டகிரி கிராமம் வழியாக டிப்பர் லாரிகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    கடந்த 29-ம்தேதி கிரஷர் உரிமையாளர்கள் டிப்பர் லாரிகளை இயக்கிய போது மீண்டும் கிராம மக்கள் லாரிகளை இயக்கவிடாமல் தடுத்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி கடந்த ஐந்து நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கிரஷர் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் சம்பங்கி,மாவட்ட செயலாளர் பிரேம்நாத், துணை செயலாளர் மது, சர்வேஸ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வேறு மாற்று வழியில் கிரஷர் லாரிகளை இயக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை கிரஷர் லாரி உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

    • ஒப்பந்த தொழி லாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
    • 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

    பெருந்துறை,

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஒப்பந்த தொழி லாளர்கள் கடந்த 4 நாட்களாக ஊதிய உயர்வு, வேலை நேர மாற்றம் மற்றும் வார விடுமுறை, சம்பளம், போனஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி யில் உள்ள அவர்களது மேலாளர் தலைமை மற்றும் கல்லூரி நிர்வாகிகளும் தொடர்பு கொண்டு பேசினர். இதில் அவர்களு க்குள் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இதில் தொழிலாள ர்களின் வேலை நேரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக பணி யாளர்கள் வேலைக்கு வர முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது ஆட்கள் பற்றாக்குறை அதிக மாக உள்ளதால் தேவையான ஊழியர்களை மீண்டும் நியமித்த பின்பு வார விடுமுறை விரைவில் அறி விக்கப்படும் என தெரிவிக்க ப்பட்டது.

    சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பாக வரும் 13-ந் தேதி சென்னை யில் மேலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

    அதில் ஏற்படும் முடி வைக் கொண்டு மறு பரிசீலனை செய்யப்படும் என தொழிலாளர்கள் தெரி வித்தனர்.

    தற்போது 4 நாட்களாக நடைபெற்று வந்த தொழி லாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று காலை முதல் அனைத்து துப்புரவு தொழிலாளர்களும் பணிக்கு சென்றனர்.

    • ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.
    • இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதம் ரூ.21,260 வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமனையில் உடை மாற்ற, ஓய்வெடுக்க, உணவு சாப்பிட ஓய்வறை ஒதுக்கிட வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். மாத ஊதிய சீட்டு வழங்க வேண்டும்.

    வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணியை புறக்கணித்து கடந்த மாதம் 29-ந் தேதி இரவு முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 4 நாட்களாக பகல், இரவு என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் அவர்களது கோரிக்கையை ஏற்று அடுத்த 15 நாட்களில் அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன்பேரில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.

    இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாளை நடக்கவிருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
    • ஜி.எஸ்.டி வரி, அதிகாரிகளால் வணிகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கக் கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நாளை நடக்கவிருந்த கடை யடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரி, அதிகாரிகளால் வணிகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கக் கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் பேரமைப்பு நிர்வாகிகள், வணிகர் சங்கங்கள் சார்பில் நடக்க விருந்த இந்த கடையடைப்பு போராட்டம், மாநில தலைவர் அறிவுறுத்தல்படி வாபஸ் பெறப்படுகிறது.

    மேலும் சேலம் மாவட்ட சரக்கு சேவை வரி இணை கமிஷனரை சந்தித்து, குறை களை மனுவாக கொடுத்து அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார்.  

    • அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
    • இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர்.

    தேன்கனிக்கோட்டை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தின் அருகே 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளால் அப்பகுதியில் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது.

    குவாரிக்கு வரும் வாகனங்களால் சாலைகள் சேதமடைகிறது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குவாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கொரட்டகிரி கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி னர்.

    இதனிடையே கடந்த 11-ந்தேதி ஊரை காலி செய்து குழந்தைகள், மூட்டை முடிச்சுகள் மற்றும் கால்நடைகளுடன் காலி செய்து அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

    அதிகாரிகள், போலீசார் கிராம மக்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனால் நேற்று 8-வது நாளாக கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கிராமத்திற்கு திரும்பினர் இந்தநிலையில் அங்கு வந்த குவாரி மற்றும் கிரசர் ஓனர் பெடரேசன் தலைவர் சம்பங்கி, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ், தனி தாசில்தார் சரவணன் ஆகியோர் நேற்று மாலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாற்று வழியில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திற்கு திரும்பினர்.

    போலீசார் கிராமமக்களை பாதுகாப்புடன் கிராமத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கடந்த 8 நாட்களாக நடந்த கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • தமிழகம் முழுவதும் இன்று 987 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தகவல்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன், தனியார் பள்ளி சங்கங்கள் பேச்சுவார்த்தை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. எனினும் தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகின. அவற்றின் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை இன்று பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன்,  பல்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முழுவதும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    ×